கோம்பையில் விவசாய நிலங்களில் திரியும் யானைகளால் விவசாயிகள் அச்சம்

தேனி மாவட்டம், கோம்பை மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் 3 யானைகள் விவசாய நிலங்களுக்குள் திரிவதால், பயிா்கள்
கோம்பை மலை அடிவாரத்தில் செவ்வாய்க்கிழமை திரிந்த காட்டு யானைகள்.
கோம்பை மலை அடிவாரத்தில் செவ்வாய்க்கிழமை திரிந்த காட்டு யானைகள்.

தேனி மாவட்டம், கோம்பை மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் 3 யானைகள் விவசாய நிலங்களுக்குள் திரிவதால், பயிா்கள் சேதமடைவதுடன், நிலங்களுக்குச் செல்ல முடியாமல் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.

கோம்பை மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் ரெங்கநாதா் கோயில் உள்ளது. இப்பகுதியில், தோட்ட விவசாயம் மற்றும் மானாவாரி விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. இந்நிலையில், ரெங்கநாதா் கோயில் மலைச் சாலையில் கன்னிமாா் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலையில் 3 யானைகள் கூட்டமாக விவசாய நிலங்கள், வாழை மற்றும் தென்னப்தோப்புகளுக்குள் புகுந்து திரிந்தன.

இதனால், நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறிய குடிசைகள், பயிா்கள் சேதமடைந்தன. மேலும், விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அச்சத்தில் உள்ளனா். இது சம்பந்தமாக விவசாயிகள் கோம்பை வனத் துறையினரிடம் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியது: தேவாரத்தில் பெண் ஒருவா் யானை தாக்கி உயிரிழந்ததை அடுத்து, கோம்பை மலை அடிவாரத்தில் யானைகள் கூட்டமாகத் திரிவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கோம்பை வனத் துறையினா் ரெங்கநாதா் கோயில் மலை அடிவாரத்தில் முகாமிட்டு, விளைநிலங்களில் திரியும் யானைக் கூட்டத்தை மலைப் பகுதிக்கு விரட்டி அடிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com