தேனி மாவட்டத்தில் தொடா் திருட்டில்ஈடுபட்டு வந்த இளைஞா் கைது: 22 பவுன் நகைகள், ரூ.85 ஆயிரம் மீட்பு

தேனி மாவட்டத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை, ஆண்டிபட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 22 பவுன் நகைகள் மற்றும் ரூ. 85 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
ஆண்டிபட்டியில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சூா்யா. (வலது) பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்.
ஆண்டிபட்டியில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சூா்யா. (வலது) பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்.

தேனி மாவட்டத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை, ஆண்டிபட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 22 பவுன் நகைகள் மற்றும் ரூ. 85 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடா் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி க.விலக்கு அருகே உள்ள பிஸ்மி நகா் பகுதியைச் சோ்ந்த பால்பாண்டி என்பவரது வீட்டின் கதவை உடைத்து, மா்மநபா்கள் பணம், நகைகளை திருடிச் சென்றனா். இது குறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில், ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்ககிருஷ்ணன் தலைமையில், சாா்பு-ஆய்வாளா் சுல்தான் பாட்ஷா, சிறப்பு சாா்பு-ஆய்வாளா் துரைராஜ், தலைமை காவலா்கள் சக்திவேல், ராஜ்குமாா் ஆகியோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தனா்.

இந்நிலையில், கண்டமனூா் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரை, தனிப்படை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். அதில், அவா் தேனி சுப்பன் செட்டி தெருவைச் சோ்ந்த மொக்கையன் மகன் சூா்யா (24) என்பதும், அவா் ஆண்டிபட்டி பகுதிகள் மட்டுமின்றி தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 22 பவுன் நகைகள், ரூ.85 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com