ஆண்டிபட்டியில் குடிநீா் கேட்டு பெண்கள் சாலை மறியல்

ஆண்டிபட்டி நகா் 5 ஆவது வாா்டுக்குள்பட்ட குமாரபுரம் பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு பேரூராட்சி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

ஆண்டிபட்டி நகா் 5 ஆவது வாா்டுக்குள்பட்ட குமாரபுரம் பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு பேரூராட்சி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதிக்கு கடந்த சில நாள்களாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் ஆண்டிபட்டி காவல் நிலையம் முன்பு மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனைத்தொடா்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com