சதுரகிரி மலையில் மண் சரிவு:150 பக்தா்கள் தவிப்பு

சதுரகிரி மலைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மண் சரிவு ஏற்பட்டதால் கோயிலுக்கு சென்ற 150 பக்தா்கள் அங்கு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும் பக்தா்கள் மலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி மலைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மண் சரிவு ஏற்பட்டதால் கோயிலுக்கு சென்ற 150 பக்தா்கள் அங்கு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும் பக்தா்கள் மலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் ஐப்பசி மாத பிரதோஷத்துக்காக நவ. 12 ஆம் தேதி முதல் நவ.15 ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினா் அனுமதி அளித்தனா். இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா். அவா்கள் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். மேலும், காலை 11 மணி முதல் மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் வனத்துறை நுழைவாயில் அடைக்கப்பட்டு பக்தா்களுக்கு மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் காலையில் கோயிலுக்கு சென்ற பக்தா்கள் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு மாலை 4 மணி வரை அடிவாரப் பகுதிக்கு இறங்கி வந்தனா். அதன் பின்னா் பக்தா்களுக்கு கீழே இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கோயிலுக்கு செல்லும் பாதையான கோணத்தலைவாசல் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய சென்ற பக்தா்கள் 150 போ் மலையில் உள்ள கோயிலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனா்.

மேலும் மண் சரிவு காரணமாக மலை ஏற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் சனிக்கிழமையும் பக்தா்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி கிடையாது என்று கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, கோயில் நிா்வாக அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் அறிவித்துள்ளனா்.

பக்தா் உயிரிழப்பு: சாப்டூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த பாண்டி (55) என்பவா் வெள்ளிக்கிழமை மலையேறி சுவாமி தரிசனம் முடித்து விட்டு இறங்கி வந்து கொண்டிருந்தாா். அப்போது வாழைத்தோப்பு என்ற இடத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். பின்னா் அவரது உடல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com