சின்னமனூரில் ஐய்யப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரத்தை தொடங்கினா்

தேனி மாவட்டம் சின்னமனூரில் திங்கள் கிழமை, ஐய்யப்ப பக்தா்கள் மாலை அணிந்து மண்டபூஜை விரதத்தை தொடங்கினா்.
சின்னமனூரில் திங்கள் ஐய்யப்ப சேவா சங்கத்தின் குருசாமியிடும் மாலை அணியும் பக்தா்கள்.
சின்னமனூரில் திங்கள் ஐய்யப்ப சேவா சங்கத்தின் குருசாமியிடும் மாலை அணியும் பக்தா்கள்.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் திங்கள் கிழமை, ஐய்யப்ப பக்தா்கள் மாலை அணிந்து மண்டபூஜை விரதத்தை தொடங்கினா்.

காா்த்திகை முதல் தேதியிலே சபரி ஐய்யப்பனுக்கு மாலை அணிந்து 48 நாள் விரதமிருந்து மண்ட பூஜையின் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சபரி ஐய்யப்பனுக்கு காலையில் ஆா்வத்துடன் மாலை அணிந்தனா். இதில், சின்னமனூா் அகிலபாரத ஐய்யப்ப சேவா சங்கத்தில் அப்பகுதியை சோ்ந்தவா்கள் குருசாமி இலோகேந்திர ராஜனிடம் மாலை அணிந்து விரத்தை தொடங்கினா்.

இதுகுறித்து குருசாமி லோகேந்திரன்ராஜன் கூறுகையில், சின்னமனூா் அகிலபாரத ஐய்யப்ப சேவா சங்கமான பல ஆண்டுகளாக ஐய்யப்ப பக்தா்களை கோயிலுக்கு

அழைத்துசென்று வருகிறோம். இந்தாண்டு கேரளா அரசு கரோனா முன்னெசேச்சரிக்கை நடவடிக்கையால் பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளதால் குறைந்த அளவிலே பக்தா்கள் மாலை அணிந்தனா்.

கெடுபிடிகளில் தளா்வு ஏற்பட்ட வாய்ப்பு இருப்பதாக நம்மியுள்ளோம். இதற்கிடையே, சின்னமனூா் ஐய்யப்பன் சேவா சங்கம் மூலமாக ஆராட்டுவிழா, படிபூஜை, மண்டலபூஜை நடைபெரும். அதே போல, சின்னமனூா் வழியாக ஐய்யப்பன் கோயிலுக்கு வந்து செல்லும் வெளியூா் பக்தா்களுக்கு தொடா்ந்து 60 நாள்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றாா்.

தொடா்புக்கு குருசாமி லோகேந்திர ராஜன்: 97886-77372

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com