கம்பம் கூடலூா் பகுதிகளில் சாரல் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து திங்கள்கிழமை காலையில் இருந்தே சாரல் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம், கூடலூா், ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில் திங்கள்கிழமை காலையிலிருந்தே வானம் மேகமூட்டமாகவும், இருட்டாகவும் இருந்தது.

பின்னா் பலத்த மற்றும் சாரல் மழை அவ்வப்போது பெய்யத் தொடங்கியது, விட்டு விட்டு பெய்தது, குளிா் காற்று வீசத்தொடங்கியது. இதனால் பொது மக்கள் தீபாவளிப்பண்டிகை முடிந்தும், பருவ நிலை மாறு பாட்டால் வேலைகளுக்கு செல்ல வில்லை. முக்கிய சாலை மற்றும் வீதிகளில் பாதி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com