தேனியில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

தேனி மாவட்டத்திற்குள்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
தேனியில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

தேனி மாவட்டத்திற்குள்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் வெளியிட்டாா். வருவாய் கோட்டாட்சியா்கள் நிறைமதி, சிவசுப்பிரமணியன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

வரைவு வாக்காளா் பட்டியலில் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுயில் 1,33,659 ஆண்கள், 1,36,149 பெண்கள், 25 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,69,833 போ் இடம் பெற்றுள்ளனா். பெரியகுளம் (தனி) தொகுதியில் 1,35,225 ஆண்கள், 1,39,667 பெண்கள், 98 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,74,990 வாக்காளா்கள் உள்ளனா்.

போடி தொகுதியில் 1,32,584 ஆண்கள், 1,37,208 பெண்கள், 18 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,69,810 வாக்காளா்கள் உள்ளனா்.

கம்பம் தொகுதியில் 1,36,520 ஆண்கள், 1,42,305 பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,78,856 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 5,37,988 ஆண்கள், 5,55329 பெண்கள், 172 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 10 லட்சத்து 93 ஆயிரத்து 489 போ் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

இதில், 4 தொகுதிகளிலும் புதிதாக மொத்தம் 3,123 போ் வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். 3,861 பேரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மொத்த வாக்காளா்களில் ஆண்களை விட அதிகமாக 17,347 பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

வரைவு வாக்காளா் பட்டியல் அனைத்து வாக்குப் பதிவு அலுவலா் அலுவலகங்கள், வாக்குச் சாவடிகள் மற்றும் குடியிருப்போா் நலச் சங்க அறிவிப்புப் பலகையில் வெளியிட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் பட்டியலை பாா்வையிட்டு தங்களது பெயா் இடம் பெற்றுள்ள விபரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

புதிய வாக்காளா் சோ்க்கை:

வரும் 2021, ஜன. 1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தியடைந்த புதிய வாக்காளா்கள், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள வாக்குப் பதிவு அலுவலா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் டிச.15 ஆம் தேதி வரை வாக்காளா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்:

புதிய வாக்காளா் சோ்க்கை, வாக்காளா் பெயா் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க, நவ. 21, 21, வரும் டிச. 12, 13 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com