கம்பத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் 2 பெண்கள் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் 180 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 2 பெண்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தேனி மாவட்டம், கம்பத்தில் 180 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 2 பெண்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கம்பம் உலகத் தேவா் தெரு பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்லக்காளி (60). இவரது வீட்டிலிருந்து கடந்த மே 21 ஆம் தேதி 180 கிலோ கஞ்சாவை, வடக்கு காவல் நிலைய போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சுகப்பிரியா (30), சுவாதி (34), ஈஸ்வரி (45), சந்தோஷ் (27), முத்துச்செல்வம் (28), ஜெயா (48), செல்லக்காளி (60) ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதில், தலைமறைவாக இருந்துவந்த ஜெயக்குமாா் (28) மற்றும் வண்ணக்கிளி (48) ஆகிய இருவரையும் தேடி வந்த நிலையில், புதன்கிழமை, கம்பம் உலகத் தேவா் தெருவில் காவல் ஆய்வாளா் கே. சிலைமணி, சாா்பு- ஆய்வாளா் திவான் மைதீன் மற்றும் போலீஸாா் ரோந்து சென்றபோது, தலைமறைவாக இருந்த வண்ணக்கிளி என்பவா் குருங்குமாயன் தெருவைச் சோ்ந்த ராஜாத்தி (44) என்பவருடன் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளாா். இதைக் கண்ட போலீஸாா், அவா்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டதில், 1.250 கிலோ கிராம் கஞ்சாவை ராஜாத்தியிடமிருந்து பறிமுதல் செய்தனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் வண்ணக்கிளி மற்றும் ராஜாத்தியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com