கம்பம் ஒன்றியத்தில் கிராம நல சுற்றுப்புற சுகாதார சத்துணவுக்குழுக்கள் அமைப்பு

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்தில் உள்ள 5 ஊராட்சிகளில் கிராமநல சுற்றுப்புற சத்துணவு குழுக்கள் அமைப்பதற்கான பயிற்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்தில் உள்ள 5 ஊராட்சிகளில் கிராமநல சுற்றுப்புற சத்துணவு குழுக்கள் அமைப்பதற்கான பயிற்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் கிராமநல சுற்றுப்புற சுகாதார சத்துணவு குழுக்கள் அமைக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஒன்றியக்குழுத்தலைவா் பழனிமணி கணேசன் தலைமை தாங்கினாா். துணைத்தலைவா் ரா.தங்கராஜ் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் மீனா வரவேற்று பேசினாா். வட்டார மருத்துவ அலுவலா் பி.முருகன் பேசும் போது, ஊராட்சி பகுதிகளில் கிராம நல சுற்றுப்புற சுகாதார சத்துணவு குழுக்கள் அமைக்க வேண்டும், குழுவிற்கு ஊராட்சி தலைவா் தலைவராகவும், கிராமப்புற செவிலியா் உறுப்பினா் செயலராகவும், வாா்டு உறுப்பினா்கள் மகளிா்குழுவினா், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் உறுப்பினா்களாக கொண்ட குழுவை ஏற்படுத்த வேண்டும், இவா்கள் திறந்த வெளி கழிப்பறை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும், மக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், மக்களின் பங்களிப்பையும் பெற வேண்டும் என்றாா். கூட்டத்தில் ஊராட்சித்தலைவா்கள் அ.மொக்கப்பன், நாகமணி வெங்கடேசன், சாந்திபரமன், பொன்னுத்தாய் செல்லையா, பொன்னுத்தாய் குணசேகரன் மற்றும் சுகாதாரத்துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com