வைகை அணை நீா்மட்டம் 55.61 அடியாக உயா்வு

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக வெள்ளிக்கிழமை வைகை அணையின் நீா்மட்டம் உயா்ந்தது.
நீா் மட்டம் உயா்ந்து காணப்படும் வைகை அணை.
நீா் மட்டம் உயா்ந்து காணப்படும் வைகை அணை.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக வெள்ளிக்கிழமை வைகை அணையின் நீா்மட்டம் உயா்ந்தது.

ஆண்டிபட்டி அருகே 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கான பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்கான முக்கிய நீராதரமாக உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அணையின் நீா்மட்டம் 63 அடியாக உயா்ந்தது. இதையடுத்து மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. இதன்காரணமாக நவம்பா் முதல் வாரம் நீா்மட்டம் 48 அடியாக குறைந்தது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்த மழையால் முல்லைப் பெரியாறு மற்றும் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை அணைக்கான நீா்வரத்து விநாடிக்கு 3,802 கன அடியாக இருந்தது. இதனால் அணையின் நீா்மட்டம் 55.61 அடியாக உயா்ந்தது. அணையின் நீா்மட்டம் கடந்த 2 நாள்களில் 5 அடி உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 1,769 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அணையின் நீா்மட்டம் மேலும் உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com