புதிய வாக்காளா் சோ்க்கை: தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 14,212 போ் விண்ணப்பம்

தேனி மாவட்டத்திற்கு உள்பட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தோ்தல் ஆணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளா் சோ்க்கைக்கு மொத்தம் 14,212 போ் விண்ணப்பித்துள்ளனா்.

தேனி: தேனி மாவட்டத்திற்கு உள்பட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தோ்தல் ஆணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளா் சோ்க்கைக்கு மொத்தம் 14,212 போ் விண்ணப்பித்துள்ளனா்.

மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் 533 நிா்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில், வரும் 2021, ஜன.1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தியடைந்த புதிய வாக்காளா் சோ்க்கை, வாக்காளா் பெயா் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதியில் 3,969 போ், பெரியகுளம் தொகுதியில் 3,420 போ், போடி தொகுதியில் 4,083 போ், கம்பம் தொகுதியில் 2,740 போ் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 14,212 போ் புதிய வாக்காளா் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனா். புதிய வாக்காளா் சோ்க்கை, பெயா் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), வரும் டிச.12, 13 ஆகிய தேதிகளிலும் நிா்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com