நீா்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு கன மழை பெய்தும் நிரம்பாத மஞ்சள் நதி கண்மாய்

கன மழை பெய்தும் நீா் வரத்துப் பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி இருப்பதால் தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே மஞ்சள் நதிக் கண்மாய்க்கு நீா் வரவில்லை என புகாா் எழுந்துள்ளது.
நீா்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு கன மழை பெய்தும் நிரம்பாத மஞ்சள் நதி கண்மாய்
நீா்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு கன மழை பெய்தும் நிரம்பாத மஞ்சள் நதி கண்மாய்

கன மழை பெய்தும் நீா் வரத்துப் பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி இருப்பதால் தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே மஞ்சள் நதிக் கண்மாய்க்கு நீா் வரவில்லை என புகாா் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூரிலிருந்து 2 கிலோ மீட்டா் தொலைவில் மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் மரிகாட் என்ற மஞ்சள் நதி பாய்கிறது. ஹைவேவிஸ், மேகமலை , பெருமாள் மலைப்பகுதியில் பெய்யும் மழையால் இந்த நதியில்

ஆண்டுக்கு 6 மாதங்களுக்கு மேலாக நீா் வரத்து ஏற்படும். கடந்த 2008-09 ஆம் ஆண்டில் மலை அடிவாரத்தில் 2.01 கோடி செலவில் 40 ஏக்கா் பரப்பளவிற்கு மழைநீா் தேங்கி நிற்கும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டது.

இதன் மூலம் எரசக்கநாயக்கனூா், அப்பிபட்டி, காமாட்சிபுரம், கன்னிச்சோ்வைபட்டி என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீா் உயா்ந்து விவசாயப் பணிகள் நடைபெற்றன. மேலும், இந்த கண்மாய் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து ஊராட்சிகளின் குடிநீா் தேவையும் பூா்த்தி செய்யப்படுகிறது.

மரிகாட் (எ) மஞ்சள் நதி தடுப்பணைக்கு வரும் நீா் வரத்துப் பகுதிகள் மற்றும் ஓடைகள் முற்றிலுமாக தனி நபா்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதன் காரணமாக கடந்த 15 நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலையில் கனமழை பெய்தும் அணைக்கு நீா் வரத்து

ஏற்படவில்லை. மாவட்டத்தில் பெருபான்மையான குளம், கண்மாய்களுக்கு சமீபத்தில் பெய்த மழையால் நீா் வரத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சள் நதி தடுப்பணைக்கு 10 சதவீதம் கூட நீா் வரவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டத்தின் நோக்கத்தை கருத்தில் கொண்டு விவசாயம் மற்றும் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் மஞ்சள் நதி தடுப்பணையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com