ஆண்டிபட்டி அருகே கண்மாயில் இறந்து மிதந்த மீன்கள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்மாயில் மா்மமான முறையில் மீன்கள் இறந்தது குறித்து வெள்ளிக்கிழமை பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை கண்மாயில் மா்மமாக இறந்து மிதந்த மீன்கள்.
ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை கண்மாயில் மா்மமாக இறந்து மிதந்த மீன்கள்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்மாயில் மா்மமான முறையில் மீன்கள் இறந்தது குறித்து வெள்ளிக்கிழமை பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே மயிலாடும்பாறையில் 5 ஏக்கா் பரப்பளவு கொண்ட கெங்கன்குளம் கண்மாய் அமைந்துள்ளது . இந்த கண்மாய் சின்னசுருளி அருவியில் இருந்து வரும் தண்ணீரின் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் நீா் இருப்பைப் பொருத்து விவசாயிகள் மீன் குஞ்சுகள் வளா்ப்பது வழக்கம்.

இந்த ஆண்டு பெய்த தொடா் மழை காரணமாக கண்மாயில் அதிகளவு தண்ணீா் நிரம்பியது. இதைத்தொடா்ந்து அப்பகுதி விவசாயிகள் சாா்பில் அக்கண்மாயில் கட்லா, ரோகு, மிருகால், சிசி, ஜிலேபி உள்ளிட்ட 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் வளா்ப்புக்கு விடப்பட்டன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கண்மாயில் விடப்பட்ட அனைத்து மீன்களும் மா்மமான முறையில் இறந்து மிதந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கண்மாயில் மா்மநபா்கள் விஷம் கலந்தாா்களா? அல்லது மீன்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எதுவும் கலப்படம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் இறந்த மீன்களை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இதற்கிடையே மீன்கள் அனைத்தும் இறந்ததால் கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீரில் அதிகளவில் துா்நாற்றம் வீசியது. இதனையடுத்து கண்மாயில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் ஓடையில் திறந்து விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com