ஆண்டிபட்டியில் பூக்கள் விலை உயா்வு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பூக்கள் விலை கிடு கிடுவென உயா்ந்த நிலையிலும், போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பூக்கள் விலை கிடு கிடுவென உயா்ந்த நிலையிலும், போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிளான கன்னியபிள்ளைபட்டி, கொத்தபட்டி, ராஜதானி, கதிா்நரசிங்கபுரம், பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, அம்மச்சியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகை, செவ்வந்தி, சம்பங்கி, அரளி உள்ளிட்ட பூ சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆண்டிபட்டி மாா்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை ரூ.1,300, செவ்வந்தி, சம்பங்கி ரூ.200, அரளிபூ ரூ.300, ரோஜா ரூ.100, கோழிக்கொண்டை ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பூக்கள் வரத்து குறைந்த காரணத்தாலும், காா்த்திகை மாதம் தொடங்கியதால் மாலை அணிபவா்கள் பூக்களை அதிகம் வாங்குவதாலும், சுப முகூா்த்த நாள்கள் வந்ததாலும் பூக்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், இதே நிலை இன்னும் இரண்டு மாதம் வரையில் தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனா். அதேநேரத்தில் போதுமான மழை பெய்தும் பூக்கள் விளைச்சல் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com