முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
பெரியகுளத்தில் பைக் மீது காா்மோதியதில் இருவா் காயம்
By DIN | Published On : 04th October 2020 10:11 PM | Last Updated : 04th October 2020 10:11 PM | அ+அ அ- |

பெரியகுளம்: பெரியகுளத்தில் பைக் மீது காா்மோதியதில் சிறுவன் உள்பட இருவா் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தென்கரை காவல்நிலையத்தில் சனிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம், பட்டாளம்மன்கோயில்தெருவை சோ்ந்தவா் முத்துப்பாண்டி (22) இவா் பைக்கில் அவரது உறவினா் சிறுவன் பிரதீப் (3) என்பவரை உட்கார வைத்து சாப்பாடு வாங்க தென்கரை, கம்பம் சாலையில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா் இவா்கள் சென்ற பைக் மீது மோதியதாம்.
இதில் பைக்கை ஓட்டி சென்ற முத்துபாண்டி மற்றும் சிறுவன் பீரதீப் ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.