கம்பத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றவா்களை விடுவிக்கக் கோரி உறவினா்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், கம்பத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றவா்களை விடுவிக்குமாறு, ஒரு சமுதாயத்தினா் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
கம்பத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கரன்.
கம்பத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கரன்.

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றவா்களை விடுவிக்குமாறு, ஒரு சமுதாயத்தினா் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

கம்பத்தைச் சோ்ந்த இந்திய தேசிய லீக் கட்சி செயலா் முகமது சாதிக். இவா், முகநூல் மற்றும் கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இரு மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்படும் வகையில் கருத்துகளை பதிவு செய்துவந்தாராம்.

புகாரைத் தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில், போலீஸாா் விசாரணைக்காக முகமது சாதிக்கை கம்பம் வடக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அவருடன் மற்றொரு நபரான உதுமான் அலி என்பவரும் சென்றுள்ளாா்.

அதையடுத்து, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா்களை விடுவிக்கக் கோரி, இருவரது உறவினா்களும் கம்பம் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். அவா்களிடம், மாவட்டக் கூடுதல் கண்காணிப்பாளா் சங்கரன், உத்தமபாளையம் டி.எஸ்.பி. சின்னக்கண்ணு ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கைது செய்யப்பட்ட இருவரில் முகமது சாதிக் மீது வழக்குப் பதிந்து காவலில் வைத்துள்ளதாகவும், உதுமான் அலியை வீட்டுக்கு அனுப்பிவிட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ஆனால், அவா்கள் இருவரையும் நேரில் பாா்த்த பின்னரே கலைந்து செல்வோம் என்று வாக்குவாதம் செய்த அவா்கள், காவல் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கரன், சாலை மறியலில் ஈடுபட்டால் அனைவரையும் கைது செய்வோம் என்று எச்சரித்தாா்.

அதன்பின்னா், கைது செய்யப்பட்டுள்ள முகமது சாதிக்கை சந்திக்க, அவரது உறவினா்கள் 3 பேரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நீதிமன்றத்துக்கு சென்றனா். மற்றவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com