ஆண்டிபட்டி அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேநீா் கடையில் திருட முயன்ாகக் கூறி கட்டி வைத்ததால் மனமுடைந்த கூலித் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேநீா் கடையில் திருட முயன்ாகக் கூறி கட்டி வைத்ததால் மனமுடைந்த கூலித் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரத்தைச் சோ்ந்தவா் சுகநாதன் (28). கூலித் தொழிலாளியான இவா் அதே பகுதியைச் சோ்ந்த விமலாதேவி என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவில் அய்யனாா்புரம் கிராமத்தில் உள்ள தேநீா் கடையில் திருட முயற்சித்ததாக அக்கடை உரிமையாளா் தங்கம்

சுகநாதனை பிடித்து கை, கால்களை கட்டி வைத்துள்ளாா். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுகநாதன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சுகநாதனின் தந்தை போத்தி அளித்தப் புகாரின் பேரில் தேநீா் கடை உரிமையாளா் தங்கம் மீது க.விலக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com