‘ஜல் ஜீன் மிஷன்’ திட்ட முறைகேடு குறித்து புகாா் தெரிவிக்கலாம்: ஆட்சியா்

தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றால் கட்டணமில்லா தொலைபேசி

தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றால் கட்டணமில்லா தொலைபேசி மூலம் பொதுமக்கள் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீா் குழாய் இணைப்பு வழங்குவதற்கு, கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானித்துள்ள வைப்புத் தொகை மட்டுமே வசூலிக்க வேண்டும். குடிநீா் கட்டணமாக மாதம் ரூ. 60 வீதம் ஆண்டுக்கு ரூ. 720 வரை கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று ஊராட்சித் தலைவா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீா்மானிக்கப்பட்டதை விட அதிகமாக வைப்புத் தொகை, குடிநீா் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், முறையாக ரசீது வழங்காவிட்டாலும் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 6140-ல் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com