தேனி அருகே ஆக்கிரமிப்பை அகற்றுவதில் தகராறு: ஒன்றியக் குழு உறுப்பினரின் தந்தை காயம்

தேனி அருகே மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி, கெப்புரெங்கன்பட்டியில் புதன்கிழமை, ஓடை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமைப்பை
மஞ்சிநாநாயக்கன்பட்டி ஊராட்சியில் புதன்கிழமை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் ஏற்பட்ட தகராறில் தலையில் காயமடைந்த துரைராஜ்.
மஞ்சிநாநாயக்கன்பட்டி ஊராட்சியில் புதன்கிழமை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் ஏற்பட்ட தகராறில் தலையில் காயமடைந்த துரைராஜ்.

தேனி அருகே மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி, கெப்புரெங்கன்பட்டியில் புதன்கிழமை, ஓடை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமைப்பை அகற்றும் போது ஏற்பட்ட தகராறில் போடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரின் தந்தையின் தலையில் காயம் ஏற்பட்டது.

கெப்புரெங்கன்பட்டியிருந்து போடி வரை செல்லும் மங்கம்மாள் சாலை அருகே உள்ள ஓடைப் புறம்போக்கு பகுதியில் அதே ஊரைச் சோ்ந்த சக்திவேல் (50) என்பவா் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளாா். ஊராட்சித் திட்டப் பணிகளுக்காக இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் முடிவு செய்து, சக்திவேலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அவா், தாமாக முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளாததால் போடி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரஞ்சோதி, கிராம நிா்வாக அலுவலா் ஜெயக்குமாா், ஊராட்சித் தலைவா் வீரலட்சுமி, பழனிசெட்டிபட்டி காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் கண்ணன் ஆகியோா் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது சக்திவேல், அவரது மகன் செல்வக்குமாா், மனைவி வசந்தி ஆகியோா் அங்கு வந்து ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அதே ஊரைச் சோ்ந்த போடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் விக்னேஷ்குமாா் (திமுக) என்வரின் தந்தை துரைராஜ்(55) என்பவரை, சக்திவேலின் மகன் செல்வக்குமாா் கல்லால் தாக்கினாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த துரைராஜ், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com