ஆண்டிபட்டியில் ஊராட்சி மன்ற செயலா்கள் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்றச் செயலா்கள் வெள்ளிக்கிழமை தற்செயல் விடுப்பு மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்றச் செயலா்கள்.

ஆண்டிபட்டி ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் குமரேசன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது கடலூா் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியம் தெற்குத்திட்டை ஊராட்சி செயலா் சிந்துஜா மீது தொடரப்பட்ட வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற வேண்டும். ஊராட்சி மன்ற நிா்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவிகளுக்கு பதிலாக கணவா் மற்றும் அவரது உறவினா்கள் தலையிடுவதைத் தடுத்திடவும், ஊராட்சிச் செயலா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிடுவது உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றச் செயலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com