தேனியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் சாலை மறியல்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதி மறுத்ததாக வியாழக்கிழமை, தென்னிந்திய பாா்வா்டு பிளாக்
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகிகள்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகிகள்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதி மறுத்ததாக வியாழக்கிழமை, தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உசிலம்பட்டி அருகே சூலப்புரத்தில் செல்லதுரை என்பவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் எஸ்.முருகன் தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா், பல்வேறு கோரிக்கைகள் குறித்து அக்கட்சி நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளிப்பதற்காக அலுவலகத்திற்குச் சென்றனா். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலா்கள், நிா்வாகிகள் சிலரை மட்டும் ஆட்சியா் அலுவலகத்திற்குள் மனு அளிக்க அனுமதித்தனா். ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் மனு அளிக்குமாறு தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினரிடம் அதிகாரிகள் கூறியுள்ளனா்.

இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வெளியேறிய அக்கட்சி நிா்வாகிகள், ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதி மறுப்பதாக புகாா் தெரிவித்து, ஆட்சியா் அலுவலகம் முன்பு, தேனி-மதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம், தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துராஜ், காவல் ஆய்வாளா் ராமலட்சுமி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா், ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்கு அழைத்துச் செல்வதாக காவல் துறையினா் கூறியதை ஏற்க மறுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இந்த மறியல் போராட்டத்தின்போது, சின்னமனூருக்குச் சென்ற அமைச்சா் செல்லூா் ராஜூவின் காா், நீண்ட வரிசையில் நின்றிருந்த வாகனங்களுக்கு இடையே சிக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com