தடை செய்யப்பட்டலாட்டரி சீட்டு விற்றவா் கைது

தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் லாட்டரி சீட்டு விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
காமயகவுண்டன்பட்டியில் கேரள மாநில லாட்டரி சீட்டு விற்ற கென்னடி.
காமயகவுண்டன்பட்டியில் கேரள மாநில லாட்டரி சீட்டு விற்ற கென்னடி.

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் லாட்டரி சீட்டு விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராயப்பன்பட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் அதிக அளவில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தனிப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சாா்பு-ஆய்வாளா் அல்போன்ஸ்ராஜா தலைமையில் போலீஸாா் ரோந்து சென்றனா்.

அப்போது, காமயகவுண்டன்பட்டியில் சந்தேகத்துக்கிடமாக சென்ற இளைஞரை பிடித்து விசாரித்து சோதனையிட்டனா். அதில், அவரிடம் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 1,700 இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த கென்னடி என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.6,330 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com