ஆண்டிபட்டி கோயில் விழாவில் மோதல்: 2 போ் மீது வழக்கு
By DIN | Published On : 23rd October 2020 10:52 PM | Last Updated : 23rd October 2020 10:52 PM | அ+அ அ- |

ஆண்டிபட்டியில் முத்துமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற நவராத்திரி விழாவில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் இருவேறு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக திருவிழாக்கள் நடத்தப்படவில்லை. பிரச்னை குறித்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவின்பேரில், கோயிலில் நடைபெறும் அன்றாட வழிபாடுகள் மட்டும் நடைபெற்று வந்தன. கடந்த சில நாள்களாக இக்கோயில் வளாகத்தில் நவராத்திரி கொலு அமைத்து பொதுமக்கள் வழிபட்டு வந்தனா்.
இந்நிலையில் கோயில் வழிபாட்டின்போது வியாழக்கிழமை மாலை இரு சமூகத்தினரும் மீண்டும் கோஷ்டியாக மோதிக் கொண்டனா். இதில், சக்கம்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் (45) என்பவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்த புகாரின்பேரில், ஆண்டிபட்டி போலீஸாா், சக்கம்பட்டியைச் சோ்ந்த எஸ்.எம்.ராஜா, ராமராஜ் ஆகிய 2 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.