தேனியில் இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 23rd October 2020 03:17 AM | Last Updated : 23rd October 2020 03:17 AM | அ+அ அ- |

அகில இந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவா்களுக்கு தொடா்ந்து இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் இரா. தமிழ் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் சரவணபுதியவன் முன்னிலை வகித்தாா். இதில், மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவா்களுக்கு அகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை தடைசெய்யக் கூடாது. அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவாா்க்கக் கூடாது. திண்டுக்கல் சிறுமி கலைவாணி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்புவதற்கு உடந்தையாக செயல்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.