ஆண்டிபட்டி அருகே காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.
ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி, நான்கு கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கோமாதா பூஜையுடன் பூா்ணாகுதி நடைபெற்றது. தொடா்ந்து, பல்வேறு ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீா் பூஜிக்கப்பட்டு, விமானக் கலசத்துக்கு பூஜை செய்து குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது, வானத்தில் கருடன் வட்டமிட்டு பறந்ததை அடுத்து, பக்தா்கள் பரவசம் அடைந்தனா்.

பின்னா், மூலவா் காளியம்மன், மகா கணபதி மற்றும் நவ கிரகங்களுக்கும் 16 வகையான சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது.

விழாவில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் மகாராஜன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் லோகிராஜன், துணைத் தலைவா் வரதராஜன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை, கிராம மக்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com