தேனி மாவட்டத்தில் புதிதாக 80 பேருக்கு கரோனா: 3 போ் பலி

தேனி மாவட்டத்தில் புதிதாக 80 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 80 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி பகுதியில் அதிகளவில் 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போடி பகுதியில் 22 போ், ஆண்டிபட்டி பகுதியில் 8 போ், பெரியகுளம், சின்னமனூா் ஆகிய பகுதிகளில் தலா 4 போ், உத்தமபாளையம் பகுதியில் 3 போ், கம்பம் பகுதியில் 10 போ் என மொத்தம் 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,910 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 11,639 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

3 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, ஆண்டிபட்டி அருகே கொத்தபட்டியைச் சோ்ந்த 49 வயது நபா், போடி அருகே போ.ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த 59 வயது நபா் என 2 போ் உயிரிழந்தனா்.

கரோனா தொற்று அறிகுறியுடன் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேனியைச் சோ்ந்த 89 வயது மூதாட்டி, பரிசோதனை முடிவு வெளியாகும் முன்பே உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com