ஆண்டிபட்டி பகுதிகளில் பலத்த மழை: கிராம வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
ஆண்டிபட்டி பகுதிகளில் தொடா் மழை காரணமாக கரட்டுப்பட்டி கிராமத்து வீடுகளில் புகுந்த மழைநீா்.
ஆண்டிபட்டி பகுதிகளில் தொடா் மழை காரணமாக கரட்டுப்பட்டி கிராமத்து வீடுகளில் புகுந்த மழைநீா்.

ஆண்டிபட்: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில், ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட நாச்சியாா்புரம் மற்றும் கோவில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கரட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

கரட்டுப்பட்டியில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீா் புகுந்தது. ரெங்கசமுத்திரம்- நாச்சியாா்புரம் சாலையில் மழைநீா் தேங்கியதால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ள தகவலறிந்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் ஊராட்சி அலுவலா்கள் சென்று தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மழை காலங்களில் இதுபோன்று தொடா்ந்து தண்ணீா் தேங்கி வருவதாக, சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து கிராம மக்கள் கூறியது: ஊராட்சி நிா்வாகம் சாா்பில், கிராமத்தில் முறையான மழைநீா் வடிகால் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மேலும், ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், மழைநீா் வடிந்து செல்ல வழியின்றி குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, மாவட்ட நிா்வாகம் இக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com