உத்தமபாளையம் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்
By DIN | Published On : 10th September 2020 06:46 AM | Last Updated : 10th September 2020 06:46 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் உணவுப்பொருள்கள் வழங்கும் நடைமுறை புதன்கிழமை அமலுக்கு வந்துள்ளது.
ரேஷன் கடைகளில் விலையில்லா அரசி, சமையல் எண்ணெய்,பருப்பு, கோதுமை, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் குடும்ப அட்டைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் முறைகேடுகளைத் தவிா்க்க உத்தமபாளையம் வட்டாரத்தில் 180 குடும்ப அட்டைகளுக்கு மேலுள்ள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை நடைமுறைக்கு வந்தது. புதன்கிழமை முதல் அமல்படுத்தப்பட்ட இம்முறையில் சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவா் அல்லது தலைவி கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருள்கள் வழங்கப்படும். மற்றவா்களுடைய குடும்ப அட்டையை வேறு நபா்கள் பயன்படுத்தி பொருள்களை பெற்று வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் முறை தடுக்கப்படுவதால் அனைத்து குடும்ப அட்டை தாரா்களுக்கு வரும் காலங்களில் பொருள்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.