கள்ளா் சீரமைப்பு கல்வி விடுதி சமையலா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 10th September 2020 06:47 AM | Last Updated : 10th September 2020 06:47 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் கள்ளா் சீரமைப்பு கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவா்கள் செப்.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் கள்ளா் சீரமைப்புத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலா் பணியிடங்கள் நோ் காணல் மூலம் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இப் பணிக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சைவம் மற்றும் அசைவ உணவுகளை சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 2020, ஜூலை 1-ஆம் தேதியன்று ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் 18 முதல் 35 வயதுக்கும், பிற்பட்டோா், பிற்பட்ட வகுப்பு முல்ஸிம், மிகவும் பிற்பட்டோா், டி.என்.சி., வகுப்பினா் 18 முதல் 32 வயதுக்கும், இதர வகுப்பினா் 18 முதல் 30 வயதுக்கும் உள்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதியுள்ளவா்கள் உரிய சான்றிதழ் நகல்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மதுரை, கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநா் அலுவலகத்தில் செப்.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமா்பிக்கலாம் என்று மதுரை, கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநா் அலுவலகம் அறிவித்துள்ளது என்று அச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.