ஊரக மற்றும் நகா்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் கிடைக்காததால் அதிகாரிகள் திணறல்

தேனி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில நிதி ஆணையம் மூலமாக வழங்கப்படும் மானியம், கடந்த 6 மாதமாக கிடைக்காததால் அதிகாரிகள் திணறி வருகின்றனா்.

தேனி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில நிதி ஆணையம் மூலமாக வழங்கப்படும் மானியம், கடந்த 6 மாதமாக கிடைக்காததால் அதிகாரிகள் திணறி வருகின்றனா்.

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், கம்பம், சின்னமனூா், போடி, பெரியகுளம், கடமலை-மயிலை, ஆண்டிபட்டி, தேனி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில், ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில வரி வருவாயிலிருந்து 10 சதவீதம் மானியமாக வரையறுக்கப்படாத நிதியாக மாநில நிதி ஆணையம் மூலமாக வழங்கப்படுகிறது.

இந்த நிதி, கிராமங்களில் குடிநீா், தெரு விளக்கு, சாலைப் பணி, பள்ளிக் கட்டடம், கழிப்பறை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பராமரிப்பு செய்து, அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், தேனி மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த மானியமானது கடந்த 6 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியாமல் முடங்கிக் கிடக்கிறது.

கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், நிதி இல்லை எனக் கூறி அதிகாரிகள் சமாளித்து வருகின்றனா். எனவே, உடனடியாக மானியத்தை ஒதுக்கீடு செய்யவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com