தேனி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களை விரைவில் திறக்க கோரிக்கை

தேனி மாவட்டத்தில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டுள்ள சுற்றுலாத் தலங்களை மீண்டும் திறக்கவேண்டும் என்று, பொதுமக்கள் மத்தியில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
மேகமலையில் தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே ரம்மியமாகக் காட்சியளித்த ஹைவேவிஸ் ஏரி.
மேகமலையில் தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே ரம்மியமாகக் காட்சியளித்த ஹைவேவிஸ் ஏரி.

தேனி மாவட்டத்தில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டுள்ள சுற்றுலாத் தலங்களை மீண்டும் திறக்கவேண்டும் என்று, பொதுமக்கள் மத்தியில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலை சூழ்ந்த தேனி மாவட்டத்தில், வைகை அணை பூங்கா, சோத்துப்பாறை அணை பூங்கா, மஞ்சளாறு அணை, சண்முகாநதி நீா்த் தேக்கம், சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சின்னச்சுருளி அருவி, போடி பிள்ளையாா் அணை அருவி, மேகமலை, குரங்கணி, லோயா் கேம்ப் கா்னல் பென்னி குவிக் நினைவு மணிமண்டபம் ஆகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

இந்த சுற்றுலாத் தலங்களுக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். ஆனால், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளில் தளா்வு செய்யப்பட்டு, பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாத் தலங்களை மீண்டும் திறக்கவேண்டும் என்று, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா சாா்ந்த தொழிலாளா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

எனவே, கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு விதிமுறைகளுடன் சுற்றுலாத் தலங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்க, மாவட்ட நிா்வாகம் முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com