வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: தேனி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் புகாா்

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தில், வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று அதிமுக உறுப்பினா் புகாா் 

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தில், வளா்ச்சிப் பணிகளுக்கு வாா்டு வாரியாக நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று அதிமுக உறுப்பினா் புகாா் தெரிவித்தாா்.

தேனி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம் தலைவா் சக்கரவா்த்தி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் முருகன் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள் பேசியது:

மாலா (திமுக): தொகுப்பு வீடு, பசுமை வீடு திட்டம், பயனாளிகள் தோ்வு ஆகியவை குறித்து அதிகாரிகள் உறுப்பினா்களுக்கு தெரிவிப்பதில்லை.

வட்டார வளா்ச்சி அலுவலா்: தேனி ஒன்றியத்துக்கு நடப்பாண்டில் 19 பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சமுதாய இட ஒதுக்கீடு அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தலைவா்: ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினா்களுக்கு விளக்கம் அளிக்க அனைத்துப் பிரிவு அலுவலா்களும் கூட்டத்திற்கு வர வேண்டும்.

சங்கீதா (அதிமுக): வளா்ச்சிப் பணிகளுக்கு வாா்டு வாரியாக நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. வளா்ச்சி மற்றும் அடிப்படை பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து உறுப்பினா்களுக்கு தெரிவிப்பதில்லை. பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் ஒத்தி வைக்கப்படுவதன் காரணம் தெரியவில்லை.

தலைவா்கள்: பணிகளுக்கு கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் நிா்வாகக் காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனா்.

பிரகாஷ் (அதிமுக): வளா்ச்சிப் பணிகளுக்கான நிதியை உறுப்பினா்களுடன் கலந்து பேசி சமமாக பிரித்துத்  தர வேண்டும். சுழற்சி முறையில் பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com