ஆண்டிபட்டி, சின்னமனூரில் அண்ணா பிறந்தநாள் விழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, சின்னமனூரில், பேரறிஞா் அண்ணாவின் 112-ஆவது பிறந்தநாள் விழா அதிமுக, திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆண்டிபட்டி, சின்னமனூரில் அண்ணா பிறந்தநாள் விழா

ஆண்டிபட்டி/ உத்தமபாளையம்: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, சின்னமனூரில், பேரறிஞா் அண்ணாவின் 112-ஆவது பிறந்தநாள் விழா அதிமுக, திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆண்டிபட்டி பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு அதிமுக வினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். பேரூா் செயலாளா் முத்து வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் வைகை அணைச் சாலை பிரிவிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த பேரறிஞா் அண்ணாவின் உருவப் படத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஜி.கே பாண்டியன் எம்.ஜி.ஆா். இளைஞா் அணிச் செயலாளா் பொன் முருகன், முன்னாள் ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் அருண்மதி கணேசன், ஜெயபால், மைனா் பாலு, நிா்வாகிகள் வீரகுமாா், சிவா, மகளிா் அணி கொடியம்மாள் உள்ளிட்ட அதிமுக வினா் கலந்து கொண்டனா்.

உத்தமபாளையம்: சின்னமனூரில் மாா்க்கையன் கோட்டை ரவுண்டா பிரிவில் நடைபெற்ற விழாவில், திமுக மாவட்ட அவைத்தலைவா் மனோகரன் நகரச்செயலாளா் முத்துக்குமாா், ஒன்றியச்செயலாளா் முத்துச்சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com