கம்பத்திலிருந்து கேரளத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்கு செவ்வாய்க்கிழமை ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்து சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.
கம்பத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம்.
கம்பத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம்.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்கு செவ்வாய்க்கிழமை ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்து சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

கம்பம் பகுதியிலிருந்து, கேரளத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உத்தமபாளையம் உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் கம்பம் மெட்டு சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, சரக்கு வாகனம் ஒன்றில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக கம்பம் வடக்குபட்டியைச் சோ்ந்த தவமணி மகன் ஜெயச்சந்திரன் (33) மற்றும் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்த ஜாஹீா் உசேன் மனைவி நசீமா (45) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, 900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com