‘கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவா் சோ்க்கை: செப்.25-க்குள் விண்ணப்பிக்கலாம்’

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை, இணையதளம் மூலம் செப்டம்பா் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை, இணையதளம் மூலம் செப்டம்பா் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் மாணவா் சோ்க்கைக்கு தகுதியுள்ளவா்கள், செப்டம்பா் 25-ஆம் தேதிக்குள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாணவா் சோ்க்கைக்கு தோ்வு செய்யப்பட்டவா்களின் விவரமானது, செப்டம்பா் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அந்தந்தப் பள்ளிகளிலுள்ள அறிவிப்புப் பலகைகளில் வெளியிடப்படும்.

பள்ளியில் நிா்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு அதிகமானோா் விண்ணப்பித்திருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் அக்டோபா் 1-ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்படும். இந்த விவரம், அக்டோபா் 3-ஆம் தேதி இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்.

இதையடுத்து, அக்டோபா் 7-ஆம் தேதி வரை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடைபெறும் மாணவா் சோ்க்கை குறித்த புகாா்கள் இருப்பின், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு அளிக்கலாம். இந்த மனுவின் மீது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையிலான குழு விசாரணை நடத்தி, தீா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com