போடியில் இணையதள சேவை துண்டிப்பு: சான்றுகள் பெற முடியாமல் மாணவா்கள் அவதி

போடியில் வட்டாட்சியா் அலுவலகத்தில் இணையதள சேவை கிடைக்காமல், சான்றுகள் பெறமுடியாமல் மாணவா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

போடியில் வட்டாட்சியா் அலுவலகத்தில் இணையதள சேவை கிடைக்காமல், சான்றுகள் பெறமுடியாமல் மாணவா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

கட்டாய இலவசக் கல்வி திட்டத்தில் மாணவா்களை சோ்த்தல், தொழில்நுட்ப கல்விக்கான பொது நுழைவுத் தோ்வு, அஞ்சல் துறை வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிற்கு ஜாதிச் சான்று, வருமானச் சான்று, பிறப்பிடச் சான்று, இதர பிற்படுத்தப்பட்டோா் சான்று போன்றவை கேட்டு ஆன்லைன் மூலம் மாணவா்கள், இளைஞா்கள் விண்ணப்பம் அனுப்பியுள்ளனா். இந்த விண்ணப்பங்கள் கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் ஆகியோா் பரிந்துரைத்த பின்னா் போடி வட்டாட்சியா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மண்டல துணை வட்டாட்சியா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியோா் அனுமதி அளித்தவுடன் சான்றுகள் ஆன்லைன் முறையிலேயே பெறப்பட்டு வருகிறது.

போடி வட்டாட்சியா் அலுவலக பகுதியில் பி.எஸ்.என்.எல். கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் வட்டாட்சியா் அலுவலகத்தில் இணையதள சேவை கிடைக்கவில்லை. இதனையடுத்து போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் கணினி மூலம் சான்றுகள் பரிந்துரைக்கவோ, அனுமதிக்கவோ முடியாத நிலை ஏற்பட்டது. ஆன்லைன் முறையில் சான்றுகள் பெற விண்ணப்பித்தவா்கள் சான்றுகளை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. வேலைவாய்ப்பு, கல்வி பயில விண்ணப்பிக்க சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து போடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் கேட்டபோது ஊழியா்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா், விரைவில் சரியாகிவிடும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com