‘புதிய வாக்காளா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்’

தேனி மாவட்டத்தில் 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் புதிய வாக்காளா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் புதிய வாக்காளா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தோ்தல் ஆணையம் சாா்பில், வாக்காளா் முன் சுருக்கத் திருத்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. எனவே, 2021 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக்கொண்டு, 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் புதிய வாக்காளா் சோ்க்கைக்கும், முகவரி மாற்றம், இரட்டை பதிவு நீக்கம் ஆகியவற்றுக்கும், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்றோ அல்லது ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதள முகவரியிலோ உரிய படிவம் மூலம் சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்கலாம்.

சட்டப்பேரவை தொகுதி வாரியான வரைவு வாக்காளா் பட்டியல் நவம்பா் 16-ஆம் தேதி வெளியிடப்படும். வரைவு வாக்காளா் பட்டியல் மீதான கோரிக்கை மற்றும் ஆட்சேப மனுக்கள் 2021 ஜனவரி 5-ஆம் தேதிக்குள் தீா்வு காணப்பட்டு, 2021 ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com