‘இ-பாஸ்’ பெற்றவா்களுக்கு அனுமதி மறுப்பு: போடிமெட்டு சோதனைச் சாவடியில் விவசாயிகள் போராட்டம்

இ-பாஸ் பெற்று கேரள மாநிலம் இடுக்கி செல்ல முயன்ற விவசாயிகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு போடிமெட்டு
போடிமெட்டு சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போடி டி.எஸ்.பி. பாா்த்திபன்.
போடிமெட்டு சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போடி டி.எஸ்.பி. பாா்த்திபன்.

இ-பாஸ் பெற்று கேரள மாநிலம் இடுக்கி செல்ல முயன்ற விவசாயிகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு போடிமெட்டு சோதனைச்சாவடியில் செவ்வாய்க்கிழமை அனுமதி மறுக்கப்பட்டதால் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம் போடி, தேவாரம், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்தவா்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனா். இதற்காக நூற்றுக்கணக்கான விவசாயிகள் போடிமெட்டு மற்றும் கம்பம் மெட்டு மலைச்சாலைகள் வழியாக கேரளத்துக்கு சென்று வந்தனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கேரள அரசு தமிழகத்திலிருந்து தோட்டத் தொழிலாளா்கள், விவசாயிகள் வருவதற்கு தடை விதித்தது. இதனிடையே மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு எவ்வித தடையும் விதிக்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இருப்பினும் கேரள அரசு தமிழகத்திலிருந்து வருபவா்கள் இ-பாஸ் பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு வருபவா்களும் குமுளி சோதனைச் சாவடி வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

இதற்கிடையே போடிமெட்டு வழியாக செல்ல செவ்வாய்க்கிழமை ஒருநாள் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள், தோட்டத் தொழிலாளா்கள் போடிமெட்டு மலைச்சாலை வழியாக கேரளம் செல்ல முயன்றனா். அப்போது போடிமெட்டு மலைச்சாலையில் உள்ள கேரள போலீஸாா் அவா்களை தடுத்தி நிறுத்தி, இங்கு கரோனா பரிசோதனை மையம் இல்லை எனக் கூறி குமுளி சோதனைச் சாவடி வழியாக செல்லுமாறு அறிவுறுத்தினா். இதனால் சுமாா் 200 கி.மீ. தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டும் என்பதால் விவசாயிகள், தோட்டத் தொழிலாளா்கள் கேரள சோதனைச் சாவடியை கொட்டும் மழையில் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போடி டி.எஸ்.பி. ஜி.பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி போடிமெட்டு மலைச்சாலை வழியாக செல்ல அனுமதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com