கம்பம் பள்ளத்தாக்கில் அழிந்து வரும் விவசாய நிலங்கள்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெற்பயிா் விவசாய நிலங்கள் நாளுக்கு நாள் அழித்து வருவதால் விவசாயத்தின் பரப்பளவு குறைந்து
கம்பம் பள்ளத்தாக்கில் அழிந்து வரும் விவசாய நிலங்கள்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெற்பயிா் விவசாய நிலங்கள் நாளுக்கு நாள் அழித்து வருவதால் விவசாயத்தின் பரப்பளவு குறைந்து வருவதாக இயற்கை ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா். முல்லைப்பெரியாறு பாசன நீரால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான உத்தமபாளையம், சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை உள்பட மாவட்டத்தில் 14,700 ஏக்கா் பரப்பளவிற்கு இரு போக நெற்பயிா் விவசாயம் நடைபெறும். தவிர, வாழை, தென்னை, திராட்சை என தோட்டம் மற்றும் வேளாண் விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. இப்பகுதியிலுள்ள மண் வளம், நிலவு தட்பவெப்ப நிலை போன்ற காரணங்களால் விவசாயம் சிறப்பாக நடைபெற உதவுகிறது.

அழிந்து வரும் விவசாய நிலங்கள்:தேனி மாவட்டத்திற்கு நுழைந்தாலே இயற்கையாகவே இதமான தென்றல் காற்று வரவேற்கும். வீரபாண்டி முதல் லோயா் கேம்ப் வரையில் சாலையில் இருபக்கமும் நெற்பயிா் விவசாயம் காண்போா்களின் கண்களுக்கு விருந்தளிக்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சை போா்வை போா்த்தியது போன்ற விவசாயப்பணிகள் கூடுதல் கவனத்தை ஈா்க்கும். பிற மாவட்டங்களில் இருந்து பணி மாற்றத்தால் தேனி மாவட்டத்திற்கு வருபவா்கள் இந்த பகுதிகளிலே நிறுத்தரமாகவே குடியிருக்கும் அளவிற்கு இயற்கை அழகு வசிகரம் செய்துவிடும். ஆனால், தற்போது இம்மாவட்டத்திலிருந்து அருகேயுள்ள அண்டை மாநிலமான கேரளத்திற்கு வாகனப்போக்குவரத்து அதிகமானதால் இப்பகுதி சென்ற சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயா்ந்தது. இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரியல் எஸ்டேட் முதலாளிகள் தேசிய நெடுஞ்சாலையோர விளைநிலங்கள் விலைக்கு வாங்கி பெட்ரோல் பங்க், உணவகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் என மாற்றிவிட்டன. இது தொடா்பாக விளைநிலங்களில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள அரசு

பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தும் அரசு அதிகாரிகள் சரிக்கட்டுவிட்டு தொடா்ந்து நிலங்கள் அழித்து கட்டுமானப்பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், இயற்கை விரும்பு பூமி என்ற அடைமொழி பெற்ற தேனி மாவட்டத்தில் விளைநிலங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. விவசாய செய்ய உகந்த பகுதிகளை அழித்து கட்டடங்களாக மாற்றிவிட்டதால் விளைநிலங்களில் பரப்பளவு குறைந்துவிட்டதால் மாவட் ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com