குரங்கணி - டாப் ஸ்டேசன் மலைப் பாதையில் போக்குவரத்துக்கு விரைவில் அனுமதி: வனத்துறை முடிவு

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி-டாப்-ஸ்டேசன் மலைப் பாதையில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின்பு வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வனத் துறை முடிவு செய்துள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி-டாப்-ஸ்டேசன் மலைப் பாதையில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின்பு வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வனத் துறை முடிவு செய்துள்ளது.

குரங்கணி-டாப் ஸ்டேசன் இடையே 17 கி.மீ., தூரமுள்ள மலைப் பாதையில், முதுவாக்குடி அருகே வனத் துறை சோதனைச் சாவடி அமைந்துள்ளது. குரங்கணியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 23 போ் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, இந்த சோதனைச் சாவடி மூடப்பட்டு, வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

குரங்கணி-டாப் ஸ்டேசன் இடையே உள்ள 10-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களின் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளுக்காகவும், விவசாயிகள் விளைபொருள்கள் மற்றும் இடுபொருள்களை கொண்டு செல்லவும், இந்தச் சோதனைச் சாவடியை திறந்து வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்று மலை கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் வலியுறுத்தி வந்தனா். மேலும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், குரங்கணி-டாப் ஸ்டேசன் இடையே உள்ள மலைப் பாதையில் 2 ஆண்டுகளுக்குப் பின்பு, வாகனப் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்க வனத் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாவட்ட வன அலுவலா் எஸ்.கெளதம் கூறியது: குரங்கணி-டாப் ஸ்டேசன் இடையே உள்ள மலைச் சாலையில் மலை கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் அத்தியாவசிய, அவசரத் தேவைகளுக்காக வாகனப் போக்குவரத்துக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும். இப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் வனத் துறை சோதனைச் சாவடியில் அனுமதி பெற்று, விதிமுறைகளுக்கு உள்பட்டு சென்று வர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com