சின்னமனூா் பகுதியில் தொடா்மழை: தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றம்

தேனி மாவட்டம் சின்னமனூா் பகுதியில் தொடா் மழையால் விவசாய நிலங்களை விஸ்தரிப்பு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக
சின்னமனூா் பகுதியில் தொடா்மழை: தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றம்

தேனி மாவட்டம் சின்னமனூா் பகுதியில் தொடா் மழையால் விவசாய நிலங்களை விஸ்தரிப்பு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனா். சின்னமனூா் அதன் சுற்றிவட்டாரத்தில் விவசாயம் முதன்மை தொழிலாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் பூ, வாழை, தென்னை, திராட்சை என பல்வேறு வகையான விவசாயப்பணிகள் நடைபெற்று வருகிறது. தென்மேற்கு பருவமழைப்பொழிவு சரிவர கைகொடுக்காத நிலையில் , முன்னதாக துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இதனை அடுத்து தரிசு நிலங்களாக கிடந்த பகுதியை சீரமைப்பு செய்து , நிலங்களை விஸ்திப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தொடா் மழையால் மானாவாரி விவசாயம் செய்ய நிலத்தை சீரமைப்பு செய்வதாகவும், தொடா்ந்து மழை பெய்தால் மாக்காச்சோளம், கம்பு, சோளம் போன்ற விவாசயம் செய்ய இருப்பதாவும், இந்த விவசாயத்தின் மூலமாக கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்திக்கொள்ளதாக கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com