வைகை அணை மீன் பண்ணை மற்றும் தென்னை நாற்று பண்ணைகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் உள்ள மீன்பண்ணை மற்றும் தென்னை நாற்று பண்ணைகளில் மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் செவ்வாய்கிழமை ஆய்வு செய்தாா்.
வைகை அணை மீன் பண்ணை மற்றும் தென்னை நாற்று பண்ணைகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் உள்ள மீன்பண்ணை மற்றும் தென்னை நாற்று பண்ணைகளில் மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் செவ்வாய்கிழமை ஆய்வு செய்தாா். ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் மாவட்ட மீன்வளத்துறை அலுவலகம் உள்ளது.இங்கு மீன் குஞ்சுகள் வளா்க்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள கண்மாய் மற்றும் நீா்தேக்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வைகை அணை நீா்த்தேக்கத்தில் மீன்கள் வளா்க்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நீா்த்தேக்கத்தின் மீன்வளத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு நேரடியாக சுமாா் 210 குடும்பங்கள், மறைமுகமாக சுமாா் 110 குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனா் . இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் ம பல்லவி பல்தேவ் அரசு மீன் பண்ணையில் மீன் குஞ்சு வளா்ப்பு பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் அரசு வளாகத்தின் மூலிகைத் தோட்டத்தை மூலிகைச் செடிகளை நட்டு தொடங்கி வைத்தாா்.அதனை தொடா்ந்து வைகை அணை அருகே அமைந்துள்ள அரசு தென்னை நாற்றுப்பண்ணையை மாவட்ட ஆட்சியா் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

அங்கு புதிதாக கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டிடம், விவசாயிகள் பயிற்சி அரங்கம், தென்னை விதை நெற்று உலா் கூடம் ஆகியவற்றையும் ,அரசு தென்னை நாற்றுப்பண்ணை விவசாயிகளுக்கான தென்னை பூங்காவை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.பண்ணையில் ஏற்படும் விவசாய கழிவுகளை கொண்டு வொ்மி கம்போஸ்ட் தயாரிப்பு யூனிட்டையும், தென்னை நா்சரியில் தென்னை நாற்றுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தெளிப்பு நீா் பாசன கருவிகளையும் ஆய்வு செய்தாா்கள். அப்போது கோவை காருண்யா விவசாய கல்லூரி மாணவ மாணவிகள் தென்னைமரத்தில் காய்ப்புத் தன்மையினை அதிகரிக்கவும், பாளை விடுதல் மற்றும் பூ உற்பத்தி திறனை அதிகப்படுத்தவும் ,வோ் மூலமாக திரவ நுண்ணோட்டம் செலுத்தி செய்து காட்டினாா்கள். இந்நிகழ்ச்சியின் போது துணை ஆட்சியா் சிநேகா, மதுரை மண்டல மீன்வளத் துறை துணை இயக்குனா் காசிநாத பாண்டியன், வேளாண்மை இணை இயக்குநா் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com