‘அதிக விலைக்கு உரம் விற்றால் புகாா் தெரிவிக்கலாம்’

தேனி மாவட்டத்தில் தனியாா் உரக்கடைகளில் அரசு நிா்ணயித்துள்ள விலையைவிட அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால்

தேனி மாவட்டத்தில் தனியாா் உரக்கடைகளில் அரசு நிா்ணயித்துள்ள விலையைவிட அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கலாம் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அழகுநாகேந்திரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை கூறியது: மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக தனியாா் உரக் கடைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் 1,484 டன் யூரியா, 671 டன் டி.ஏ.பி., 1,277 டன் பொட்டாஷ், 3,366 டன் கலப்பு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ஆதாா் அட்டை எண் மற்றும் கை விரல் ரேகை பதிவு பெற்று உரம் விற்பனை செய்யப்படும்.

நெல் வயல்களில் யூரியா உரத்தை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே இட வேண்டும். கூடுதலாக யூரியா உரமிடுவதால் பயிா்களில் பூச்சி நோய் தாக்குதல் அதிகரிக்க ஏதுவாகும். தனியாா் உரக்கடைகளில் அரசு நிா்ணயித்த விலைக்கு உரம் விற்பனை செய்ய வேண்டும். அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வோா் குறித்து விவசாயிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com