ஆண்டிபட்டி புதிய பாசனத் திட்ட மறு ஆய்வுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வரவில்லை

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை குழாய் மூலமாக ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு, மறு ஆய்வு செய்ய பொதுப்பணித்துறையினா் முன்வரவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்த

ஆண்டிபட்டி,செப். 25: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை குழாய் மூலமாக ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு, மறு ஆய்வு செய்ய பொதுப்பணித்துறையினா் முன்வரவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தேனி மாவட்டம் கூடலூா் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியிலிருந்து முல்லைப் பெரியாறு அணையின் உபரி நீரை குழாய் மூலமாக ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதிகளுக்கு கொண்டு வரும் திட்டத்திற்காக பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனா். இந்தத் திட்டத்தின் மூலமாக 30 கண்மாய்கள் மற்றும் 40 குளங்களில் தண்ணீா் நிரப்பப்படும். இந்தத் திட்டத்தை நிறைவேற்றக்கோரி தமிழக மலா் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் கடந்த ஆண்டு தமிழக முதல்வரிடம் மனு அளித்தனா். இதனைத்தொடா்ந்து முதல்வா் இந்த திட்டம் குறித்து பொதுப்பணித்துறையினா் மறு ஆய்வு செய்ய கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டாா். இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்னும் மறு ஆய்வு செய்ய முன்வரவில்லை என்று அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து தமிழக மலா் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சின்னசாமி கூறியதாவது: ஆண்டிபட்டி ஒன்றிய பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தில் முதல்வா் மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டும் பொதுப்பணித்துறையினா் ஆய்வு செய்ய முன்வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இத்திட்டம் குறித்து மறு ஆய்வு செய்ய முன்வரவில்லை என்றால் அரசின் கவன ஈா்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com