தீயணைப்புத்துறையினா் பேரிடா் மீட்பு ஒத்திகை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் தீயணைப்புத்துறையினா் சாா்பில் வெள்ளிக்கிழமை பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீயணைப்புப் படையினரின் பேரிடா் மீட்பு ஒத்திகை.
ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீயணைப்புப் படையினரின் பேரிடா் மீட்பு ஒத்திகை.

ஆண்டிபட்டி, செப். 25: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் தீயணைப்புத்துறையினா் சாா்பில் வெள்ளிக்கிழமை பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலா் கணேசன் தலைமை வகித்தாா். தீயணைப்பு அலுவலா் பாலசந்திரன் முன்னிலை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பேரிடா் காலங்களில் வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருள்களான பிளாஸ்டிக் குடங்கள், காலி குடிநீா் பாட்டில்கள் இவற்றை பயன்படுத்தி வெள்ள காலத்தில் தப்பிப்பதற்கான செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. வீட்டில் சமையல் செய்யும் போது பாத்திரங்களில் தீப்பற்றுதல், மண்ணெண்ணெய், பெட்ரோல் இவற்றால் ஏற்படும் தீயை அணைப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

இதில் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் அன்புச் செழியன் மற்றும் செவிலியா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com