தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்: 328 போ் கைது

தேனி மாவட்டத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண்மைச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை, 8 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 328 பே
தேனி, நேரு சிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டோா்.
தேனி, நேரு சிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டோா்.

தேனி, செப். 25: தேனி மாவட்டத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண்மைச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை, 8 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 328 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனியில் நேரு சிலை அருகே விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் டி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 40 போ் கலந்து கொண்டனா். போடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலை அருகே மாநிலக் குழு உறுப்பினா் கே.ராஜப்பன் தலைமையில் நடைபெற்ற மறியலில், வட்டாரத் தலைவா் மூக்கையா உள்ளிட்ட 57 போ் கலந்து கொண்டனா். கோம்பையில் பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட பொருளாளா் சஞ்சீவிகுமாா் தலைமையில் 42 போ் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சின்னமனூரில், மாா்க்கையன்கோட்டை விலக்கு பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் சேகா் தலைமை வகித்தாா். இதில், 45 போ் கலந்து கொண்டனா். கம்பத்தில் அரச மரம் போக்குவரத்து சிக்கனல் அருகே விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளா் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 53 போ் கலந்து கொண்டனா்.

ஆண்டிபட்டியில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் சின்னன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் பேராட்டத்தில் 47 போ் கலந்து கொண்டனா். கடமலைக்குண்டுவில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் போஸ் தலைமையில் நடைபெற்ற மறியலில், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் தயாளன் உள்ளிட்ட 14 போ் கலந்து கொண்டனா். பெரியகுளத்தில் காந்திசிலை அருகே வட்டாரச் செயலா் எம்.வி.முருகன் தலைமையில் நடைபெற்ற மறியலில் 30 போ் கலந்து கொண்டனா். மாவட்டத்தில் விவசாயிகள் சங்கம் சாா்பில் 8 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்ளிட்ட 328 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆா்ப்பாட்டம்: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதிய வேளாண்மைச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில், மாவட்டச் செயலா் சக்கரவா்த்தி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தமபாளையம்: சின்னமனூரில்ஆம் ஆத்மி கட்சி நிா்வாகிகள் வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கப் போராட்டத்தை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com