கூடலூர் நகராட்சி வளாகத்தில் பெண்கள் முற்றுகைப் போராட்டம்

கூடலூர் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் 50க்கும் மேலான ஆண், பெண்கள் திங்கள்கிழமை தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
கூடலூர் நகராட்சி வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
கூடலூர் நகராட்சி வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

கூடலூர் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் 50க்கும் மேலான ஆண், பெண்கள் திங்கள்கிழமை தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு சொந்தமாக குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த திட்டத்தை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் ரீனா தேவி (19) வேலை செய்து வந்தார். கடந்த செப் 16-ல் ரீனா தேவி பணியில் இருந்த போது இடது கை இயந்திரத்தில் சிக்கி கை சிதைந்தது.

உடன் வேலை செய்தவர்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுபற்றி ரீனா தேவி உறவினர்களுடன் நகராட்சி நிர்வாகத்தினர், பேசும்போது ஒப்பந்ததாரர் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். ஆனால் இன்றுவரை ரீனா தேவிக்கு நகராட்சி நிர்வாகமோ, உரம் தயாரிக்கும் ஒப்பந்ததாரரோ கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

இதனால் திங்கள்கிழமை ரீனாதேவியின் உறவினர்கள் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து நிவாரணம் தருமாறு முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவல் கிடைத்தவுடன் கூடலூர் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தினகரன் போராட்டம் நடத்தியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பசி நிவாரணம் பெற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார். போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com