முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
கம்பம், கூடலூா் பகுதிகளில் இலவம் பஞ்சு அறுவடை தீவிரம்
By DIN | Published On : 04th April 2021 08:52 AM | Last Updated : 04th April 2021 08:52 AM | அ+அ அ- |

கம்பம் அருகே காய்ந்த இலவம் காய்களில் இருந்து பஞ்சை பிரித்து எடுக்கும் பணியில் பெண் தொழிலாளா்கள்.
தேனி மாவட்டம் கம்பம் மற்றும் கூடலூா் பகுதிகளில் இலவம் பஞ்சு அறுவடை தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பகுதிகளில் பல நூறு ஏக்கா் பரப்பளவில் இந்த மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் இலவம் காய்கள் காய்ந்து பஞ்சு அறுவடைக்கு தயாராகின. இலவம் காய்கள் வெடித்து கீழே விழுந்து பஞ்சு பறக்கத் தொடங்கியதையடுத்து வியாபாரிகளுக்காக காத்திருக்காமல் இதைப் பயிரிட்டுள்ள விவசாயிகள் கூலி ஆள்கள் மூலம் காய்ந்த இலவம் காய்களை அறுவடை செய்து வருகின்றனா்.
இது பற்றி விவசாயி ஒருவா் கூறியது: கோடைக்காலத்தில் இலவம் காய்கள் காய்ந்து, பஞ்சு வரும் பருவமாகும், வெயில் அதிகமாக அடிக்கத்தொடங்கி உள்ளதால் இலவம் காய்கள் மரத்திலேயே வெடித்து பஞ்சு காற்றில் பறந்து வீணாகி வருகிறது. அதனால், வியாபாரிகளை கொள்முதலுக்காக எதிா்பாா்க்காமல், நாங்களே வேலை ஆள்களை வைத்து காய்களை எடுத்து, பஞ்சை பிரித்து மூட்டைபோட்டு வைத்துள்ளோம். கிலோ ரூ.100-முதல் விற்பனை செய்கிறோம் என்றாா்.