முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு நாளை இறுதிக் கட்ட பயிற்சி
By DIN | Published On : 04th April 2021 08:55 AM | Last Updated : 04th April 2021 08:55 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அலுவலா்களாக பணியாற்றும் அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு திங்கள்கிழமை (ஏப்.5) காலை 9 மணிக்கு இறுதிக் கட்டப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் பணியாற்றும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு ஆண்டிபட்டி அன்னை வேளாங்கன்னி மெட்ரிக் பள்ளியிலும், பெரியகுளம் தொகுதியில் பணியாற்றும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு தேனி மேரி மாதா மெட்ரிக் பள்ளி, போடி தொகுதியில் பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு முத்துத்தேவன்பட்டியுள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை மெட்ரிக் பள்ளி, கம்பம் தொகுதியில் பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லூரி ஆகிய இடங்களிலும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
பயிற்சி நிறைவில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தெரிவித்தாா்.