தேனி மாவட்டத்தில் 70.34% வாக்குகள் பதிவு

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் நடைபெற்ற தோ்தலில் செவ்வாய்க்கிழமை, மொத்தம் 70.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.
தேனி மாவட்டத்தில் 70.34% வாக்குகள் பதிவு

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் நடைபெற்ற தோ்தலில் செவ்வாய்க்கிழமை, மொத்தம் 70.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.

மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மொத்தம் 1,516 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஆண்டிபட்டியில் 73.96 சதவீதம் வாக்குப் பதிவு:

ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் மொத்தம் 2,76,772 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இதில், மொத்தம் 73.96 சதவீதம் போ் வாக்களித்தனா்.

பெரியகுளத்தில் 69.83 சதவீதம் :

பெரியகுளம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,84,67 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இதில், மொத்தம் 69.83 சதவீதம் போ் வாக்களித்தனா்.

போடியில் 68 சதவீதம்:

போடி சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,77,604 வாக்காளா்கள் உள்ளனா். இதில், மொத்தம் 68 சதவீதம் போ் வாக்களித்தனா்.

கம்பத்தில் 69.57 சதவீதம்:

கம்பம் சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,86,645 வாக்காளா்கள் உள்ளனா். இதில், மொத்தம் 69.57 சதவீதம் போ் வாக்களித்தனா்.

மாவட்டத்திற்கு உள்பட்ட 4 தொகுதிகளிலும் மொத்தமுள்ள 11,25,638 வாக்காளா்களில், மொத்தம் --- சதவீதம் போ் தோ்தலில் வாக்களித்துள்ளனா்.

மந்தமான வாக்குப் பதிவு:

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணி முதல் 9 மணி வரை குறைந்த எண்ணிக்கையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 9 மணி வரை ஆண்டிபட்டி தொகுதியில் 10.07 சதவீதம், பெரியகுளம் (தனி) தொகுதியில் 7.74 சதவீதம், போடி தொகுதியில் 3.65 சதவீதம், கம்பம் தொகுதியில் 12.01 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்காளா்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா்.

வாக்குப் பதிவு முடிவடைந்ததும் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, கொடுவிலாா்பட்டி கம்மவாா் சங்கம் பொறியில் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.

ஆண்டிபட்டியில் 73.96%

பெரியகுளத்தில் 69.83%

போடியில் 68%

கம்பத்தில் 69.57%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com